/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மை பணியாளர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்
/
துாய்மை பணியாளர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்
ADDED : அக் 30, 2024 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி : அவிநாசி பேரூராட்சி மற்றும் திருமுருகன்பூண்டி நகராட்சியில் துாய்மை பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்பு உள்ளிட்டவைகளை வழங்கி தீபாவளி கொண்டாடப்பட்டது.
அவிநாசி பேரூராட்சியில் பணிபுரியும், 140 துாய்மை பணியாளர்கள் உட்பட ஊழியர்களுக்கு பேரூராட்சி தலைவர் தனலட்சுமி மற்றும் கவுன்சிலர்கள் சார்பில், தீபாவளி கொண்டாட புத்தாடை, இனிப்பு வழங்கப்பட்டது.
இதேபோல, திருமுருகன் பூண்டி நகராட்சியில், நகராட்சி தலைவர் குமார் தலைமையில், கவுன்சிலர்கள் இணைந்து, 150 பணியாளர்களுக்கு சீருடை, புத்தாடை, இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர், செயல் அலுவலர், கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.