/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்வி நிலையங்களில் தீபாவளி கொண்டாட்டம்
/
கல்வி நிலையங்களில் தீபாவளி கொண்டாட்டம்
ADDED : அக் 18, 2025 11:27 PM

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்வி நிலையங்களில் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வித்யாசாகர் பள்ளி கூலிபாளையம் வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தாளாளர் ஆண்டவர் ராமசாமி தீபாவளி குறித்தும், செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன் மாசுபடா தீபாவளிக் கொண்டாட்டம் குறித்தும் பேசினர். முன்னதாக மாணவர்கள் வண்ணக்கோலங்கள் வரைந்து வரவேற்றனர். பல்வேறு போட்டிகள் நடந்தன. முதல்வர் சசிரேகா பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பட்டாசுகளால் வடிவமைக்கப்பட்டிருந்த நரகாசுரன் பொம்மைக்கு தீயிட்டு, தீபாவளியை மாணவர்கள் கொண்டாடினர்.
ஸ்ரீஷிவ் வித்யா மந்திர் பி.என்.ரோடு ஸ்ரீஷிவ் வித்யா மந்திர் பள்ளியில் குழந்தைகளின் தாத்தா - பாட்டி தினம் மற்றும் தீபாவளிக் கொண்டாட்டம் நடந்தது. பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. முதியவர்களுக்கு குழந்தைப் பருவத்தை நினைவூட்டும் வகையில், சைக்கிள் டயர் ஓட்டுதல், உண்டிகோல் அடித்தல், ரேம்ப் வாக்கிங் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.