/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை நிறுவனங்களுக்கு 29ம் தேதி முதல் தீபாவளி விடுமுறை
/
பின்னலாடை நிறுவனங்களுக்கு 29ம் தேதி முதல் தீபாவளி விடுமுறை
பின்னலாடை நிறுவனங்களுக்கு 29ம் தேதி முதல் தீபாவளி விடுமுறை
பின்னலாடை நிறுவனங்களுக்கு 29ம் தேதி முதல் தீபாவளி விடுமுறை
ADDED : அக் 26, 2024 10:55 PM
தொழில் நிமித்தமாக திருப்பூர் வரும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள், கடந்த, 20 ஆண்டுகளாக, திருப்பூர் வாசிகளாகவே மாறிவிட்டனர். இருப்பினும், தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளை, சொந்த ஊருக்கு சென்று கொண்டாட விரும்புகின்றனர்.
தற்போது வடமாநில தொழிலாளர் வருகை அதிகரித்துள்ளது. வெளிமாவட்ட தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு சென்றாலும், வடமாநில தொழிலாளர் திருப்பூரில் ஈடுகட்டி விடுகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு மூன்று நாட்களே இருப்பதால், வெளிமாவட்ட தொழிலாளர் பலரும் குடும்பத்தினருடன் சொந்த ஊர் செல்கின்றனர். தொழிலாளர் வசதிக்காக, 29ம் தேதி முதல், விடுமுறை அளிக்க, பின்னலாடை மற்றும் சார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
அவசரமான வேலை இருந்தாலும், இன்றும் வழக்கம் போல் பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளனர். போனஸ் வழங்காத நிறுவனங்கள், இன்றும் பணிகளை மேற்கொண்டு, நாளை (28ம் தேதி) போனஸ் பட்டுவாடா செய்து, 29ம் தேதி முதல், விடுமுறை அளிக்க திட்டமிட்டுள்ளதாக, உரிமையாளர்கள் தெரிவித்தனர்.