/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீபாவளி வந்தாச்சுங்கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ரூ.1.15 கோடி விற்பனை இலக்கு
/
தீபாவளி வந்தாச்சுங்கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ரூ.1.15 கோடி விற்பனை இலக்கு
தீபாவளி வந்தாச்சுங்கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ரூ.1.15 கோடி விற்பனை இலக்கு
தீபாவளி வந்தாச்சுங்கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ரூ.1.15 கோடி விற்பனை இலக்கு
ADDED : செப் 29, 2024 02:13 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில், தீபாவளி சிறப்பு தள்ளுவடி விற்பனை துவங்கியுள்ளது.
திருப்பூர் - காலேஜ் ரோட்டிலுள்ள கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நேற்று நடந்த விழாவில், கலெக்டர் கிறிஸ்துராஜ், குத்துவிளக்கு ஏற்றி, பண்டிகை கால சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார். முதல் விற்பனையை, ஷோபியா என்பவர் பெற்றுக் கொண்டார்.
கைத்தறி துறை உதவி இயக்குனர் கார்த்திகேயன், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் அம்சவேணி, முதுநிலை மேலாளர் ஜெகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் பிரபு, விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.
கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் கூறியதாவது:
தீபாவளியை முன்னிட்டு, சிறப்பு விற்பனைக்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய ஆடை ரகங்கள், திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் ஷோரூம்களுக்கு வந்துள்ளன.
பட்டு, பருத்தி சேலைகள், வேட்டி, லுங்கி, ரெடிமேட் சட்டை, சுடிதார் ரகங்கள். ஆர்கானிக் பருத்தி சேலைகள் மற்றும் தலையணை உறை, படுக்கை விரிப்பு, போர்வை உள்பட ஏற்றுமதி தரம்வாய்ந்த ஜவுளி ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கோ- ஆப்டெக்ஸின் அனைத்து ஷோரூம்களிலும், பண்டிகை கால சிறப்பு விற்பனையாக, கைத்தறி ரகங்களுக்கு, 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கடந்தாண்டு திருப்பூர் மற்றும் உடுமலை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில், மொத்தம் ரூ.84.76 லட்சம் ரூபாய்க்கு தீபாவளி சிறப்பு விற்பனை நடைபெற்றது. நடப்பாண்டு, திருப்பூர் ஷோரூமில் 80 லட்சம் ரூபாய்க்கும், உடுமலையில் 35 லட்சம் ரூபாய்க்கு என, மொத்தம் 1.15 கோடி ரூபாய் மதிப்பில் ஆடை, ஜவுளி ரகங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-----------------------------------
திருப்பூர், காலேஜ் ரோட்டில் உள்ள கோ-- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவங்கியது.