தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தி.மு.க. கூட்டணி ஆர்ப்பாட்டம்

 தி.மு.க. கூட்டணி ஆர்ப்பாட்டம்

 தி.மு.க. கூட்டணி ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 13, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: 'மத்திய பட்ஜெட்டில், தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை,' எனக்கூறி, தி.மு.க. கூட்டணி சார்பில், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. செல்வராஜ் தலைமை வகித்து பேசுகையில், ''மத்திய பட்ஜெட்டில், தமிழகத்திற்கு எவ்வித நிதியும் ஒதுக்காமல், மத்திய அரசு வஞ்சிக்கிறது. அதற்கு, அ.தி.மு.க. பொது செயலர் பழனிசாமி ஆதரவாக இருக்கிறார். தமிழகத்துக்கு முறைப்படி ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல், மத்திய அரசு வஞ்சித்து வருகிறது,'' என்றார்.

காங்., மாவட்ட தலைவர் கோபால், ம.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ், இ.கம்யூ., செயலாளர் ரவி, மா.கம்யூ., மாநில குழு உறுப்பினர் காமராஜ் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us