ADDED : மார் 16, 2026 07:29 AM

அ நிறம் | அளவு
அவிநாசி: காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என்று கூறியும், தமிழகத்துக்கு பட்ஜெட்டில் எந்த நிதியும் ஒதுக்கவில்லை; தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று கூறி மத்திய அரசையும், பா.ஜ. மற்றும் கூட்டணியை கண்டித்து அவிநாசி புது பஸ் ஸ்டாண்ட் முன்பு தி.மு.க. மற்றும் கூட்டணிக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நகர தி.மு.க. செயலாளர் வசந்த் குமார் தலைமை தாங்கினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, மகளிர் அணி தலைவர் சாந்தி, நகராட்சி தலைவர் தனலட்சுமி, கவுன்சிலர் கோபால் (காங்.), வி.சி. மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, இந்திய கம்யூ. நாசர், மா.கம்யூ. வேலுசாமி, எஸ்.டி.பி.ஐ. முஸ்தபா, மக்கள் நீதி மய்யம் தண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
