ADDED : பிப் 16, 2024 12:54 AM
திருப்பூர்:தி.மு.க., சார்பில் பிரசார கூட்டம் நாளை நடக்கிறது.
வரும் லோக்சபா தேர்தல் பணிகள் குறித்து தி.மு.க., நிர்வாகிகளுடன், அமைச்சர் உதயநிதி காணொலி வாயிலாக சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். அதில், வரும் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்கும் விதமாக அனைத்து தொகுதிகளிலும் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பிரசார கூட்டத்தை நடத்த அறிவுறுத்தப்பட்டது.அவ்வகையில், திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் பிரசார கூட்டம் நாளை (17ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு திருப்பூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பெருந்துறை -- சரளை அருகே நான்கு வழிச்சாலை பகுதியில் இக்கூட்டம் நடக்கிறது.இதில், அமைச்சர் நேரு மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர்.
அ.தி.மு.க.,வினரும் பிரசார பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஜெ., பேரவையினர் திண்ணைப்பிரசாரத்தில் ஈடுபட முடிவெடுத்து, இதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பா.ஜ., சார்பில் பல்லடம், மாதப்பூரில் வரும் 27-ல் பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் மாநாடு பொதுக்கூட்டமும், மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண்; என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவும் நடைபெற உள்ளது.
நாம் தமிழர் கட்சி சார்பில், வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியினர் இப்போதே தேர்தல் பிரசாரத்துக்கு தயாராக உள்ளனர்.