தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திட்டங்கள் அளித்த தி.மு.க.வுக்கு ஓட்டு வேட்பாளர் தினேஷ்குமார் பிரசாரம்

 திட்டங்கள் அளித்த தி.மு.க.வுக்கு ஓட்டு வேட்பாளர் தினேஷ்குமார் பிரசாரம்

 திட்டங்கள் அளித்த தி.மு.க.வுக்கு ஓட்டு வேட்பாளர் தினேஷ்குமார் பிரசாரம்


ADDED : ஏப் 13, 2026 01:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 01:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: ''இளைஞர்கள் உடல் நலன் காக்கவும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும் திருப்பூருக்கு திட்டங்கள் அளித்த தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்'' என தெற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் தினேஷ்குமார் பிரசாரம் செய்தார்.

திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் தினேஷ்குமார் அதிகாலை முதல் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று அதிகாலை கே.எஸ்.சி. பள்ளி மைதானத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

பிரசாரத்தின் போது அவர் கூறியதாவது:

சிக்கண்ணா கல்லுாரி பின்புறம் 4.5 கோடி ரூபாய் மதிப்பில் உள் விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டது. தற்போது 49வது வார்டு பகுதியில் 5 கோடி ரூபாய் மதிப்பில் பல்நோக்கு விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி நடக்கிறது.

இது தவிர பல்வேறு பகுதிகளிலும் சிறிய அளவிலான விளையாட்டு மைதானங்கள், உடற் பயிற்சிக்கான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இளைஞர் உடல் நலன் மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை தி.மு.க. செயல்படுத்தியுள்ளது.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்கும் விதமாக பயிற்சிகள், உதவி தொகைகள் வழங்கப்பட்டுள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மூலம் ஏராளமான வீரர்கள் உருவாக்கப்பட்டு, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் விளையாட்டு துறை மேம்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நடைப்பயிற்சிக்கென பிரத்யேக பாதை நொய்யல் கரையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெரிச்சிபாளையம் ஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, வார்டு எண் 49, 55 மற்றும் 56 ஆகிய பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று ஓட்டு சேகரித்தார். பெரிச்சிபாளையம், பட்டுக்கோட்டையார் நகர், காட்டுவளவு, பத்மினி கார்டன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பகுதிகளில் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

நேற்று மாலை, மாநகராட்சி 44 மற்றும் 51 ஆகிய வார்டு பகுதிகளில் நேரு நகர், காட்டு வளவு, ெஷரீப் காலனி, புது மார்க்கெட் வீதி, மாநகராட்சி சந்திப்பு, குப்புசாமிபுரம், டூம் லைட் பகுதி, சின்னதோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வீதிகளில் ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்காளர்களைச் சந்தித்து ஓட்டு சேகரித்தார்.

வேட்பாளர் இன்று காலை திருநகர், அமர்ஜோதி கார்டன், ஜி.கே.கார்டன், காலேஜ் ரோடு, ஸ்ேடட் பாங்க் காலனி, எம்.ஜி.ஆர். காலனி, காதர்பேட்டை ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்யவுள்ளார். இன்று மாலை 52 மற்றும் 49 ஆகிய வார்டு பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஓட்டு சேகரிக்கவுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us