/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொத்து வரி உயர்வுக்கு கண்டனம்; தே.மு.தி.க., - பா.ம.க., ஆர்ப்பாட்டம்
/
சொத்து வரி உயர்வுக்கு கண்டனம்; தே.மு.தி.க., - பா.ம.க., ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வுக்கு கண்டனம்; தே.மு.தி.க., - பா.ம.க., ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வுக்கு கண்டனம்; தே.மு.தி.க., - பா.ம.க., ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 05, 2024 06:21 AM

திருப்பூர்; சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, திருப்பூர் மாநகர மாவட்ட தே.மு.தி.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநகர மாவட்ட செயலாளர் விசைத்தறி குழந்தைவேலு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பாக்கிய செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் ஆனந்த் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
'மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயிர் இழப்பீடு மற்றும் நிவாரணம் தாமதமின்றி வழங்க வேண்டும். மின்கட்டண உயர்வு, சொத்து மற்றும் தொழில்வரி உயர்த்தப்பட்டதால், மக்கள் சிரமப்படுகின்றனர். உடனடியாக சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்,' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பபட்டது. ஆர்ப்பாட்ட நிறைவில், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சொத்துவரியை குறைக்கவில்லையெனில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
பா.ம.க.,
சொத்து வரி, தொழில் வரி உயர்வால் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். வரிகளை குறைக்க வலியுறுத்தி, பா.ம.க., சார்பில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் சையது மன்சூர் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் காளியப்பன், வடக்கு தொகுதி தலைவர் பொன்னுசாமி, செயலாளர் ஜெயமுருகன், பல்லடம் தொகுதி தலைவர் மணிகண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். சொத்து வரி உயர்வுக்கு மற்றும் மாநகராட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.