ADDED : மே 06, 2025 06:39 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்; திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசைனக் கூட்டம் நேற்று மாலை, கட்சி மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார்.
மதுரையில் ஜூன் 1ல் நடைபெற உள்ள கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் கட்சியினர் திரளாகச் சென்று பங்கேற்பது; மாநில ஆட்சியின் சாதனைகளை அனைத்து பகுதியிலும் சென்று சேர்க்கும் வகையில், கிளைகள் வாரியாக சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது, என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
