நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க.,வில் உள்ள திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் தொகுதியில் இடம் பெற்றுள்ள ஒன்றிய, மற்றும் பகுதி அமைப்புகள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு புதிய நிர்வாகிகளை கட்சி தலைமை நியமித்துள்ளது.
அவ்வகையில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். நகர, ஒன்றிய மற்றும் பகுதி கிளை நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், ஓரணியில் தமிழ்நாடு கட்சி உறுப்பினர் சேர்க்கை, கட்சி வளர்ச்சிக்கான பணிகள் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது.