/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க. ஆலோசனைக் கூட்டம்l: 'காலி'யாக கிடந்த சேர்கள்
/
தி.மு.க. ஆலோசனைக் கூட்டம்l: 'காலி'யாக கிடந்த சேர்கள்
தி.மு.க. ஆலோசனைக் கூட்டம்l: 'காலி'யாக கிடந்த சேர்கள்
தி.மு.க. ஆலோசனைக் கூட்டம்l: 'காலி'யாக கிடந்த சேர்கள்
ADDED : நவ 01, 2025 12:27 AM

தாராபுரம்: தி.மு.க., சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி தொடர்பாக தாராபுரம் சட்டசபை தொகுதிக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.
அமைச்சர் கயல்விழி தலைமையில் தொகுதிக்கு உட்பட்ட பகுதி கட்சி நிர்வாகிகள் பூத் கமிட்டியினர் கலந்து கொண்டனர்.
இதில், முறையான ஒலி ஒளி அமைப்பு இல்லை. இதனால், பார்வையாளர்களுக்கு நிகழ்ச்சி முழுமையாக விளங்கவில்லை. பங்கேற்ற பலரும் தங்கள் மொபைல் போனில் மூழ்கியிருந்தனர்.
நிகழ்ச்சியின் இடையில் டீ குடிக்கவும், மின் தடைகாரணமாகவும் பலரும் எழுந்து வெளியே சென்று விட்டனர். இதனால், நிகழ்ச்சியின் போது மண்டபத்தில் போட்டிருந்த சேர்கள் அனைத்தும் காலியாகவே காணப்பட்டது.