ADDED : ஜூன் 24, 2025 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க., திருப்பூர் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. பலவஞ்சிபாளையம் ரோட்டில் உள்ள தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, மண்டல குழு தலைவர் பத்மநாபன்; சட்டசபை தொகுதி பார்வையாளர்கள் கணேஷ், தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், ஓட்டுச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.
கட்சி தலைவர் உத்தரவுப்படி, ஓரணியில் தமிழ்நாடு' என்ற தலைப்பில், கட்சியில் புது உறுப்பினர்கள் சேர்க்கை மேற்கொள்வது; அனைத்து பூத் கமிட்டி நிர்வாகிகளும் வீடு வீடாகச் சென்று, உறுப்பினர்கள் சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.