/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க., நிர்வாகி மண்டை உடைப்பு; ஒப்பந்ததாரருடன் மோதல் காரணமா?
/
தி.மு.க., நிர்வாகி மண்டை உடைப்பு; ஒப்பந்ததாரருடன் மோதல் காரணமா?
தி.மு.க., நிர்வாகி மண்டை உடைப்பு; ஒப்பந்ததாரருடன் மோதல் காரணமா?
தி.மு.க., நிர்வாகி மண்டை உடைப்பு; ஒப்பந்ததாரருடன் மோதல் காரணமா?
ADDED : மே 08, 2025 01:12 AM
பல்லடம்; பல்லடத்தில், ஒப்பந்ததாரருடன் ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து, தி.மு.க., நிர்வாகியின் மண்டை உடைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பல்லடம் நகராட்சி, கரையாம்புதுார் - சக்தி நகர் செல்லும் ரோடு, புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. பணிகள், 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டு வருகிறது.
பல்லடம் நகர தி.மு.க., இளைஞர் அணி துணை அமைப்பாளர் கதிர்வேல், 26. சக்தி நகர் அங்கன்வாடி மையம் அருகே, வேகத்தடை அமைக்க வேண்டும் என, ஒப்பந்ததாரர் சந்தோஷிடம் வலியுறுத்தினார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் நீடித்து, தங்களது ஆதரவாளர்களுடன் மோதிக்கொண்டனர்.
அதில், சந்தோஷ், கையில் வைத்திருந்த மண்வெட்டியால், கதிர்வேலின் தலையில் தாக்கியதில், அவரின் மண்டை உடைந்து, பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.