ADDED : மார் 06, 2026 04:53 AM

அ நிறம் | அளவு
அவிநாசி: அவிநாசி அடுத்த தேவராயம்பாளையத்தில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், சமூக நல்லிணக்க இப்தார் விருந்து நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் ரிஜ்வான் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நஸ்ருதீன் முன்னிலை வகித்தார்.
கிளைச் செயலாளர் ஜபருல்லாஹ் வரவேற்றார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அபுசாலி, த.மு.மு.க. மாநில செயலாளர் கோவை சாகுல் ஹமீது, திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார் ஆகியோர் பேசினர்.
தேவராயன்பாளையம் மஸ்ஜிதே குபா பள்ளிவாசல் தலைவர் சலீம் முத்தவல்லி உமர்சாலி,செயலாளர் முஸ்தபா, பொருளாளர் ஜபருல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
