தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க.வினர் தலையீடு: நிர்வாகப்பணிகளில் செயற்கை முடக்கம் 

உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க.வினர் தலையீடு: நிர்வாகப்பணிகளில் செயற்கை முடக்கம் 

உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க.வினர் தலையீடு: நிர்வாகப்பணிகளில் செயற்கை முடக்கம் 


UPDATED : ஜூன் 15, 2026 09:28 PM

ADDED : ஜூன் 15, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2026 09:28 PM ADDED : ஜூன் 15, 2026 08:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: 'உள்ளாட்சி அமைப்புகளில், தி.மு.க.,வினரின் தலையீடு, கெடுபிடி காரணமாக, நிர்வாகப்பணிகளில் செயற்கை முடக்கம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது' என, அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில், தி.மு.க., தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களே பெரும்பான்மையாக உள்ளனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், உள்ளூரில் உள்ள த.வெ.க., நிர்வாகிகளும், தங்கள் வார்டில் உள்ள பிரச்னைகளை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றனர்.

அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் கட்சியில், 'சீட்' பெறுவதற்கான காய்நகர்த்தலாகவே, இத்தகைய ஆர்வத்தை அவர்கள் காண்பித்து வருவதாக கூறப்படுகிறது. த.வெ.க.,வினரின் இந்த செயல்பாடு, உள்ளாட்சிகளில் கவுன்சிலர்களாக அங்கம் வகிக்கும் தி.மு.க.,வினர் மத்தியில் கோபம், அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிகாரிகளுடன் 'ஈகோ' யுத்தம் இதன் எதிரொலியாக, 'வார்டுகளில், எந்தவொரு பணியும் தங்களுக்கு தெரியாமல் நடக்கக்கூடாது; நாங்கள் சொன்ன பிறகே செய்ய வேண்டும்' என தி.மு.க.,வினர் முட்டுக்கட்டை போடுகின்றனர் என்ற புகார், சில இடங்களில் இருந்து கிளம்பியுள்ளது. இதனால், தினசரி மக்கள் பணிகளை மேற்கொள்வதில் அதிகாரிகள், கவுன்சிலர்களுக்கு இடையே 'ஈகோ' யுத்தம் நிலவ துவங்கியிருக்கிறது.உள்ளாட்சி அலுவலர்கள் சிலர் கூறியதாவது:அரசியல் பாகுபாடின்றி, மக்களின் புகார்கள் மீது நேர்மையாக நடவடிக்கை எடுக்க முனையும் அதிகாரிகளை தி.மு.க.,வினர் குறிவைக்கின்றனர்.

அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலிலும், நாங்கள் தான் வெற்றி பெறுவோம்; எங்களை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள் என தி.மு.க., மக்கள் பிரதிநிதிகள் கூறுகின்றனர். அனுசரித்து செல்லாத அதிகாரிகள், அலுவலர்கள் மீது, திட்டமிட்டு தவறான புகார்களை, முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி, பழிவாங்கும் செயல்களிலும் ஈடுபட தயாராகின்றனர்.

எனவே, முதல்வரின் தனிப்பிரிவுக்கு வரும் தனிநபர் அல்லது குறிப்பிட்ட அதிகாரிகள் மீது வரும் புகார்களை, தீர விசாரித்து உண்மைத்தன்மையை அறிந்த பிறகே அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us