/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'திட்டங்களை செயல்படுத்தாமல் விளம்பர ஆட்சி செய்யும் தி.மு.க.,'
/
'திட்டங்களை செயல்படுத்தாமல் விளம்பர ஆட்சி செய்யும் தி.மு.க.,'
'திட்டங்களை செயல்படுத்தாமல் விளம்பர ஆட்சி செய்யும் தி.மு.க.,'
'திட்டங்களை செயல்படுத்தாமல் விளம்பர ஆட்சி செய்யும் தி.மு.க.,'
ADDED : நவ 26, 2024 10:22 PM

உடுமலை; ''மக்கள் நலனுக்கான எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல், வெறும் விளம்பர ஆட்சியை தி.மு.க., செய்து வருகிறது,'' என அ.தி.மு.க., கள ஆய்வு ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.
உடுமலை அருகே குடிமங்கலத்தில், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., கள ஆய்வு ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது: தற்போதைய தி.மு.க., அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் துவக்கப்பட்ட, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால்,நுாற்றுக்கணக்கான கிராமங்கள் பயன்பெற துவங்கியுள்ளது.
பி.ஏ.பி., பாசன திட்டத்தில் நிலுவையிலுள்ள ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த சிறப்பு குழு அமைத்து, கேரள அரசுடன் அப்போதைய முதல்வர் பழனிசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், தி.மு.க., அரசு நிலுவையிலுள்ள பாசன திட்டங்களை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. மக்கள் நலனுக்கான எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல், வெறும் விளம்பர ஆட்சியை தி.மு.க., செய்து வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

