ADDED : நவ 28, 2024 05:49 AM

உடுமலை; துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி, குடிமங்கலம் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் ரத்ததான முகாம் மற்றும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மேற்கு ஒன்றிய செயலாளர் முரளி தலைமை வகித்தார்.
ஒன்றிய அவைத்தலைவர் ஜெயபால், பொருளாளர் முருகானந்தம், இணை செயலாளர் நித்தியானந்தம், ஒன்றிய குழு துணை தலைவர் புஷ்பராஜ், பொதுக்குழு உறுப்பினர் பர்வதவர்த்தினி, செயற்குழு உறுப்பினர் ஷ்யாம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கொங்கல்நகரத்தில் நடந்த ரத்ததான முகாமில், உடுமலை அரசு மருத்துவமனை ரத்ததான வங்கி டாக்டர் மோகனா உள்ளிட்ட குழுவினர், ரத்த மாதிரிகளை பரிசோதித்து சேகரித்தனர். முகாமில், 47 பேர் ரத்ததானம் செய்தனர். மதியம் வெனசப்பட்டி கருப்பராயன் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மதிய விருந்து வழங்கப்பட்டது.