ADDED : டிச 20, 2024 04:19 AM

அவிநாசி; மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, அவிநாசியில், தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவிநாசி புது பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அவிநாசி தொகுதி தி.மு.க., பொறுப்பாளர் கோகுல் கிருபாஷங்கர் தலைமை வகித்தார்.
தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி முன்னிலை வகித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை அவமதித்து பேசியதாக கூறியும், உடனே அவர் பதவி விலக வலியுறுத்தியும் கோஷமிடப்பட்டது.
ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ், பால்ராஜ், பழனிசாமி, நகர செயலாளர்கள் வசந்த்குமார் (அவிநாசி), கிருஷ்ணமூர்த்தி (பூண்டி) நகராட்சி தலைவர் குமார், பேரூராட்சித் தலைவர் தனலட்சுமி, வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் அவிநாசியப்பன், தி.மு.க., மகளிர் அணியினர் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.