/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
த.மு.மு.க.வினர் திடீர் மறியல்
/
த.மு.மு.க.வினர் திடீர் மறியல்
ADDED : டிச 07, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: டிச. 6 முன்னிட்டு திருப்பூரில், த.மு.மு.க., சார்பில், கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு கொடியேந்தியும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக காங்கயம் ரோடு, சி.டி.சி. கார்னர் பகுதியில் நேற்று மாலை அமைப்பினர் திரண்டனர். ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் சில சேர்கள் வைக்கப்பட்டிருந்தன. சேர்கள் போட அனுமதியில்லை என்று போலீசார் அவற்றை அகற்றினர்.
இதனால், ஆவேசமடைந்த அமைப்பினர் போலீசாரை கண்டித்து திடீரென காங்கயம் ரோட்டில் திரண்டு மறியல் செய்தனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. போலீசார் அவர்களுடன் பேச்சு நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர்.

