/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் இணைப்பு முறைகேடு தி.மு.க., அலுவலகத்திற்கு ரூ.84,000 அபராதம்
/
மின் இணைப்பு முறைகேடு தி.மு.க., அலுவலகத்திற்கு ரூ.84,000 அபராதம்
மின் இணைப்பு முறைகேடு தி.மு.க., அலுவலகத்திற்கு ரூ.84,000 அபராதம்
மின் இணைப்பு முறைகேடு தி.மு.க., அலுவலகத்திற்கு ரூ.84,000 அபராதம்
ADDED : டிச 09, 2025 03:48 AM
திருப்பூர்: வீட்டு மின் இணைப்புகளை, வணிக ரீதியாக பயன்படுத்திய தி.மு.க., அலுவலகத்திற்கு மின்வாரியம், 84,000 ரூபாய் அபராதம் விதித்தது.
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகம், ராஜாராவ் வீதியில் உள்ளது. இந்த கட்டடத்தில், மூன்று வீட்டு மின் இணைப்புகளும், இரண்டு வணிக ரீதியான மின் இணைப்புகளும் பயன்பாட்டில் உள்ளன.
அதேபோல், அனுப்பர்பாளையத்தில் உள்ள வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் சிறு தொழிற்சாலைக்கான மின் இணைப்பு, வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த முறைகேடுகள் குறித்து சமூக ஆர்வலர் சரவணன், மின் வாரியத்துக்கு புகார் அளித்தார். இதுகுறித்து, நேற்று நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், மின் வாரியத்தினர் இதுகுறித்து நேற்று ஆய்வு செய்தனர்.
இதில், தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் முறைகேடாக பயன்படுத்திய மூன்று மின் இணைப்புகளுக்கு, 84,174 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் கட்டட உரிமையாளர் விண்ணப்பத்தை ஏற்று, தொழிற்சாலை மின் இணைப்பு, வணிக ரீதியான பயன்பாட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
சமூக ஆர்வலர் சரவணன் கூறியதாவது:
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், கூடுதலாக வழங்கிய மின் இணைப்புகள் துண்டிக்கப்பட வேண்டும். தொடர்ந்து இந்த இணைப்பு பயன்படுத்தப்படும் நிலையில், ஒவ்வொரு முறையும் அதற்கு அபராத கட்டணம் வசூலிக்க வேண்டும். முறைகேடான மின் இணைப்பை துண்டிப்பது மட்டும் தான் தீர்வாக அமையும்.
அதேபோல், வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலக கட்டடத்தில் மின் இணைப்பு வகை மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு நாள் முறைகேடாக பயன்படுத்திய மின்சாரத்துக்கு அபராதம் விதிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

