ADDED : மார் 17, 2025 01:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்; திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக தினேஷ் குமார், நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் அடுத்த 15 வேலம் பாளையத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன் வடக்கு மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்.
ஒன்றிய பகுதியான பெருமாநல்லுாரில், தி.மு.க., அலுவலகம் புதுபிக்கப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. தினேஷ் குமார், கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். ஊராட்சி முன்னாள் தலைவர் சாந்தாமணி, மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.