/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தே.மு.தி.க., நிலத்தை ஒப்படைக்க தி.மு.க., -- எம்.எல்.ஏ.,வுக்கு உத்தரவு
/
தே.மு.தி.க., நிலத்தை ஒப்படைக்க தி.மு.க., -- எம்.எல்.ஏ.,வுக்கு உத்தரவு
தே.மு.தி.க., நிலத்தை ஒப்படைக்க தி.மு.க., -- எம்.எல்.ஏ.,வுக்கு உத்தரவு
தே.மு.தி.க., நிலத்தை ஒப்படைக்க தி.மு.க., -- எம்.எல்.ஏ.,வுக்கு உத்தரவு
ADDED : நவ 08, 2025 12:00 AM
திருப்பூர்: ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரகுமார். இவர், 2005ல் தே.மு.தி.க.,வில் இருந்தார். அப்போது, கட்சி தலைவர் விஜயகாந்த் ஏழை மக்களுக்கு வழங்கும் வகையில், திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே சேனாபதிபாளையத்தில் 3 ஏக்கர் நிலம் வாங்கினார்.
கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அளித்த நிதியில் நிலம் வாங்கப்பட்டது. அதை வீட்டு மனைகளாக பிரித்து, நிலம் இல்லாதவர்களுக்கு வழங்க திட்டமிட்டார்.
அந்த சமயத்தில், தே.மு.தி.க. கொள்கை பரப்பு செயலர் சந்திரகுமார் மற்றும் மாவட்ட பொருளாளர் மனோகரன் ஆகியோர் பெயரில் அந்த நிலம் கிரயம் செய்யப்பட்டது. பயனாளிகள், 13 பேருக்கு மட்டும் நிலம் வழங்கப் பட்டது.
மீதமுள்ள நிலம் யாருக்கும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், 2016ல் சந்திரகுமார் தி.மு.க.,வுக்கு மாறினார்.
அதன் பின், 2017ல் சந்திரகுமார் அந்த நிலத்தை பொதுமக்களுக்கு வழங்காமல் அபகரித்ததாகவும், நிலம் தே.மு.தி.க.வுக்கு தான் சொந்தம் என, காங்கேயம் சார்பு நீதிமன்றத்தில் சேலம் மாவட்ட தே.மு.தி.க. செயலர் இளங்கோ வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், 3 ஏக்கர் நிலமும் தே.மு.தி.க.வுக்கு சொந்தம். உரிய முறைப்படி ஆவணங்களின் அடிப்படையில் திரும்ப வழங்க வேண்டும் என, நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி உத்தரவிட்டார்.

