/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புருவம் உயர்த்த வைக்கிறது தி.மு.க.,
/
புருவம் உயர்த்த வைக்கிறது தி.மு.க.,
ADDED : பிப் 18, 2024 02:49 AM
திருப்பூர் லோக்சபா தொகுதியில், தி.மு.க.,வினர் தங்கள் தேர்தல் பிரசாரத்தை துவங்கி மற்ற கட்சியினரை புருவம் உயர்த்த வைத்துள்ளனர்.
கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் உதயநிதி, முதல் கட்ட தேர்தல் பிரசாரம் துவங்கும் வகையில், லோக்சபா தொகுதிவாரியாக 16 முதல் 18 வரையிலான தேதிகளில் கூட்டம் நடத்த அறிவுறுத்தினார்.
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.,வில் அமைந்துள்ள தாராபுரம், காங்கயம் தொகுதிகளுக்கான தேர்தல் பிரசார கூட்டம், ஈரோடு ஆனக்கல்பாளையத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த இரு தொகுதிகளும் ஈரோடு லோக்சபா தொகுதியில் இடம் பெற்றுள்ளது. அமைச்சர்கள் முத்துசாமி, மகேஷ், சாமிநாதன், கயல்விழி மற்றும் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் லோக்சபா தொகுதியில் அடங்கியுள்ள சட்டசபை தொகுதிகள் மற்றும் அதன் தி.மு.க., மாவட்ட அமைப்பு சார்பில், நேற்று பெருந்துறையில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்தது. நேற்றுமுன்தினம் இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். அவைத் தலைவர் நடராஜன், நகர செயலாளர்கள் தினேஷ்குமார், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பிரசாரக் கூட்டத்தில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் தேர்தல் பிரசார மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில் 'பிசி'யாக உள்ளனர். தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தேர்தல் பணிகள் துவங்கியுள்ளதால் கட்சி தொண்டர்கள் குஷியாக உள்ளனர்.