/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க., பேச்சாளர் தேர்வு போட்டி
/
தி.மு.க., பேச்சாளர் தேர்வு போட்டி
ADDED : அக் 14, 2024 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க., இளைஞர் அணி சார்பில், இளம் பேச்சாளர்கள் நுாறு பேரைக் கண்டறிந்து, கட்சி மேடைகளில் பேச வைக்க களம் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இளம் பேச்சாளர்களுக்கான போட்டி திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 98 பேர் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் போட்டியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். தெற்கு மாவட்ட செயலாளர்பத்மநாபன் தலைமை வகித்தார். எம்.பி.,பிரகாஷ், மேயர் தினேஷ்குமார், மாவட்ட இளைஞர்அணி நிர்வாகிகள் ஜெயக்குமார், தங்கராஜ் முன்னிலை வகித்தனர்.

