/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆரம்ப சுகாதார மையம் அமைக்கும் பணி :தி.மு.க., ஆதரவு - அ.தி.மு.க., எதிர்ப்பு
/
ஆரம்ப சுகாதார மையம் அமைக்கும் பணி :தி.மு.க., ஆதரவு - அ.தி.மு.க., எதிர்ப்பு
ஆரம்ப சுகாதார மையம் அமைக்கும் பணி :தி.மு.க., ஆதரவு - அ.தி.மு.க., எதிர்ப்பு
ஆரம்ப சுகாதார மையம் அமைக்கும் பணி :தி.மு.க., ஆதரவு - அ.தி.மு.க., எதிர்ப்பு
ADDED : மார் 13, 2024 01:16 AM
திருப்பூர்:இடுவம்பாளையத்தில் ஆரம்ப சுகாதார மையம் அமையும் இடத்தில் நேற்று ஆதரவு மற்றும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி, 40வது வார்டு இடுவம்பாளையத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் படுக்கை வசதியுடன் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையம் கட்ட மாநகராட்சி சார்பில், 1.20 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டது.
இதற்கு ஒரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் இது குறித்து கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து பல்லடம் (அ.தி.மு.க.,) எம்.எல்.ஏ., ஆனந்தன் தலைமையில் ஆரம்ப சுகாதார மையம் வேறிடத்துக்கு மாற்ற வலியுறுத்தி, கட்சியினர் அங்கு திரண்டு முற்றுகையிட்டனர். மாநகராட்சி அலுவலர்களுடன் அவர் தொடர்பு கொண்டு பேசி அவர்கள் கருத்தை தெரிவித்தார்.
இந்த இடம் வேறு பயன்பாட்டுக்கு நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் இடையூறாக இருக்கும். வேறு மாற்றிடம் உள்ளது. அங்கு இதை செயல்படுத்தலாம். விடாப்பிடியாக மையம் அமைக்க முயற்சிப்பது ஏற்புடையதாக இல்லை, என அவர் தெரிவித்தார்.
ஆரம்ப சுகாதார மையம் கட்டப்படவுள்ள இடத்தில் கவுன்சிலர் (தி.மு.க.,) சுபத்ராதேவி தலைமையில், அப்பகுதியினர் திரண்டு மையம் அதே இடத்தில் கட்ட வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீஸ் அதிகாரிகள் இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பேச்சு நடத்தி தீர்வு காணுமாறு தெரிவித்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

