sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 திருப்பரங்குன்றத்தால் முடியும் தி.மு.க.; திருப்பூரில் நயினார் நாகேந்திரன் 'சாபம்'

/

 திருப்பரங்குன்றத்தால் முடியும் தி.மு.க.; திருப்பூரில் நயினார் நாகேந்திரன் 'சாபம்'

 திருப்பரங்குன்றத்தால் முடியும் தி.மு.க.; திருப்பூரில் நயினார் நாகேந்திரன் 'சாபம்'

 திருப்பரங்குன்றத்தால் முடியும் தி.மு.க.; திருப்பூரில் நயினார் நாகேந்திரன் 'சாபம்'


UPDATED : ஜன 10, 2026 08:01 AM

ADDED : ஜன 10, 2026 07:18 AM

Google News

UPDATED : ஜன 10, 2026 08:01 AM ADDED : ஜன 10, 2026 07:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இதில், பா.ஜ. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:

ஆண்டுக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பின்னலாடை ஏற்றுமதி செய்யும் திருப்பூர், உலக அரங்கில், இந்தியாவுக்கே ஒரு அடையாளமாக உள்ளது. அத்தகைய நகரை, குப்பை நகராக மாற்றியதே தி.மு.க., அரசின் சாதனை. ஹிந்தி மொழி வேண்டாம் என்கின்றனர். ஆனால், திருப்பூரிலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், ஹிந்தியில் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே சிறந்த தலைவர் பிரதமர் நரேந்திர மோடி. அமெரிக்கா, ரஷ்யா என, எந்த நாட்டுக்கு சென்றாலும், மோடியிடம் உலக தலைவர்கள் நட்பு பாராட்டுகின்றனர். அந்தளவு நேர்மையும், தைரியமும் மிக்க மாபெரும் தலைவர் மோடி. பொங்கல் பரிசாக முதல்வர் ஸ்டாலின் கொடுக்கும் மூவாயிரம் ரூபாய் முழுமையாக, டாஸ்மாக் கடைகளுக்கே செல்லும்.

தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், 17 பேர் மீது ஊழல் புகார் இருக்கிறது. ஊழல் இல்லாத அரசு, டாஸ்மாக் இல்லாத, நல்லாட்சி தமிழகம் அமைய வேண்டும் என்கிற மக்களின் விருப்பம் விரைவில் நிறைவேறப்போகிறது. திருப்பரங்குன்றத்தால், முடியும் கழகம்தான் தி.மு.க.,

திருப்பூர், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துகின்ற ஊர். திருப்பரங்குன்றம், தி.மு.க. ஆட்சியை முடித்து வைக்கின்ற ஊர். தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் போட்டியிட்டாலும், அவரை வெற்றி பெற வைக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க. மீது

தி.மு.க. வீண் பழி

மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

பின்னலாடை வர்த்தகம் வாயிலாக, மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும், திருப்பூர் அதிக வருவாய் ஈட்டித்தருகிறது. இத்தகைய நகரை, தி.மு.க., அரசு, குப்பை நகராக மாற்றிவிட்டது. திருப்பூரிலுள்ள ஒரே ஒரு தி.மு.க., எம்.எல்.ஏ., தர்ணாவில் ஈடுபட்டார். குப்பை அகற்றப்படாததால், மேயருக்கு எதிராக தர்ணாவில் ஈடுபடுவதாக தெரிவித்தார்; இத்தகைய நாடகங்களை அரங்கேற்றுவது, தி.மு.க., - கம்யூ., கட்சியினருக்கு கைவந்த கலை.

மத்திய உள் துறை அமைச்சரை, அவதுாறு ஷா என்கிறார். உங்களைப்போலவே எங்களுக்கும் பதிலடி கொடுக்க தெரியும். நாடு சுதந்திரம் அடைந்தது முதல் அ.தி.மு.க., ஆட்சியை நிறைவு செய்த 2021ம் ஆண்டு வரை, தமிழகத்தின் மொத்த கடன், 4.5 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது; ஆனால், தி.மு.க., அரசு, நான்கே ஆண்டுகளில், கூடுதலாக, 5 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது. ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர் மீதும், இரண்டரை லட்சம் ரூபாய் கடன் விழுந்துள்ளது. அப்படியிருக்க, தமிழகத்தை கடனில் தள்ளியதாக, அ.தி.மு.க., மீது வீண் பழி போடுகின்றனர்.

உங்கள் கனவை சொல்லுங்கள் என்கிற புதிய திட்டத்தை துவக்கியுள்ளனர். தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி போக வேண்டும்: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து, நல்லாட்சி மலரவேண்டும் என்பதுதான், தமிழக மக்கள் ஒவ்வொருவரின் கனவு.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us