ADDED : டிச 31, 2024 04:46 AM

அவிநாசி : அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில், கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் வைபவம் நேற்று நடந்தது. சொற்பொழிவாளர் சென்னை ஜெயமூர்த்தி பேசியதாவது:
ஒரு செயல் நடைபெறுகிறது என்றால் அது எதன் அடிப்படையில் நடக்கிறது என சிந்திக்க வேண்டும். இறைவனின் வரம் கிடைக்க வேண்டுமா? தினந்தோறும் ஏதேனும் ஒரு விலங்கினங்களுக்கு அல்லது பறவைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். நாம் செய்த பாவ புண்ணியத்தின் அடிப்படையில் இறைவன் அனைத்தையும் அளிக்கிறான்.
ஒருவருக்கு அனுபவம் தரும் பாடம் எந்த ஒரு கல்வியும் கொடுக்காது. ஒருவரது சொல் ஒன்று, செயல் ஒன்று என நடவடிக்கைகள் இருந்தால் அவர்களது மதிப்பு உயராது.
நமது சிந்தனைகளும் செயலும் ஒரே குறிக்கோளுடன் பொறுமையுடன் காத்திருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.