'பொறுப்புடன் பணியாற்றுங்க' :டாக்டர்களுக்கு அறிவுறுத்தல்
'பொறுப்புடன் பணியாற்றுங்க' :டாக்டர்களுக்கு அறிவுறுத்தல்
UPDATED : ஜூலை 01, 2026 09:38 PM
ADDED : ஜூலை 01, 2026 09:11 PM
திருப்பூர்:'நாம் மக்கள் பணி செய்ய வந்துள்ளோம்; அரசு மருத்துவர் தங்கள் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும்' என, மருத்துவக் கல்லுாரி டீன் மனோன்மணி பேசினார்.
தேசிய மருத்துவ தினத்தை முன்னிட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டாக்டர்கள் சந்தித்து, வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து துறை டாக்டர்கள், பேராசிரியர்கள், கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் மருத்துவர் தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, மருத்துவக் கல்லுாரி முதல்வர் மனோன்மணி பேசுகையில், ''நாம் மக்கள் பணி செய்ய வந்துள்ளோம்; அரசு மருத்துவர் தங்கள் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும். நேர மேலாண்மை பின்பற்ற வேண்டும் என இந்நாளில் உறுதி மொழி எடுத்துக் கொள்ளுங்கள்,'' என, டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
