/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நொய்யல் அன்றும் - இன்றும்' ஆவணப்படம் வெளியீடு
/
'நொய்யல் அன்றும் - இன்றும்' ஆவணப்படம் வெளியீடு
ADDED : செப் 20, 2024 10:49 PM

திருப்பூர் : 'ஸ்டோரி' பேட்டை தயாரிப்பில் உருவான, 'நொய்யல் அன்றும் - இன்றும்' என்ற ஆவணப்பட வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
திருப்பூர், காங்கயம் ரோடு, ஜிஞ்சர் ஓட்டலில் நடந்த விழாவில், தயாரிப்பாளர் கானப்பிரியா வரவேற்றார். ஜீவ நதி நொய்யல் அமைப்பின் தலைவர் ரத்தினசாமி, திருப்பூர் தமிழ் சங்க செயலாளர் மோகன் கார்த்திக், 'நிட்மா' செயலாளர் ராஜாமணி, சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம், திருப்பூர் குமரன் கல்லுாரி முதல்வர் வசந்தி, அரச்சலுார் மகளிர் கல்லுாரி முதல்வர் கணிஎழில், கோவை வேளாண் பல்கலை துணை மக்கள் தொடர்பு அதிகாரி செங்கோட்டையன் உள்ளிட்டோர், ஆவணப்படத்தை அறிமுகம் செய்து வைத்தனர்.
ஆவணப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது; தொடர்ந்து, சமூக நலனுக்காக குறும்படங்கள் குறித்தும் பேசினர். திரைப்பட இயக்குனர் புகழ் நன்றி கூறினார்.