தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பஸ் டிரைவருக்கு மனசாட்சியே இல்லையா?

பஸ் டிரைவருக்கு மனசாட்சியே இல்லையா?

பஸ் டிரைவருக்கு மனசாட்சியே இல்லையா?


ADDED : மார் 22, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 08:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்-: பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் பகுதியில் இருந்து, தொழில், வேலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, ஏராளமான பொதுமக்கள், தொழிலாளர்கள் திருப்பூர், பல்லடம் பகுதிக்கு சென்று வருகின்றனர்.

இவர்கள் பெரும்பாலும் அரசு பஸ்களையே நம்பியுள்ளனர். சில அரசு பஸ்கள் இங்குள்ள பஸ் ஸ்டாப்பில் நின்று செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

நீண்ட காலமாக, இப்பகுதி பொதுமக்கள், இதற்காக போராடி வரும் நிலையில், கள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாப்பில், அனைத்து அரசு பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என்ற உத்தரவை, போக்குவரத்து கழகத்திலிருந்து பொதுமக்கள் போராடிப் பெற்றனர். இருப்பினும், சில அரசு பஸ்கள் நிற்பதில்லை.

பொதுமக்கள் கூறுகையில், 'திண்டுக்கல், தாராபுரம் பஸ்களில் செல்லுங்கள் என, அரசு பஸ் நடத்துனர்கள் அலட்சியமாக கூறுகின்றனர். இவர்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? இவர்களது குடும்பத்தை சேர்ந்த பெண்கள் யாராவது வேகாத வெயிலில் இவ்வாறு நின்றிருந்தால் இப்படித்தான் செய்வார்களா? மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us