/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
3 நாட்களாக தவித்த நாய்; எஜமானரை கண்டதும் துள்ளிக்குதித்து ஓட்டம்
/
3 நாட்களாக தவித்த நாய்; எஜமானரை கண்டதும் துள்ளிக்குதித்து ஓட்டம்
3 நாட்களாக தவித்த நாய்; எஜமானரை கண்டதும் துள்ளிக்குதித்து ஓட்டம்
3 நாட்களாக தவித்த நாய்; எஜமானரை கண்டதும் துள்ளிக்குதித்து ஓட்டம்
ADDED : மார் 20, 2025 05:06 AM

பல்லடம் : திருப்பூர் மாவட்டம், பல்லடம், காளிவேலம்பட்டியை சேர்ந்த வடிவேல் என்பவர், கடந்த, 2 நாள் முன், பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தார்.
புறநோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், அன்று மாலையே வீடு திரும்பினார். இவர் சிகிச்சைக்கு வரும்போது, அவருடன் வந்த வளர்ப்பு நாய், வார்டுக்கு வெளியே காத்திருந்தது. ஆனால், சிகிச்சை முடிந்த வடிவேல், வேறு வழியாக வீட்டுக்கு சென்றார். உரிமையாளர் திரும்ப வருவார் என்ற எதிர்பார்ப்புடன், நாய் வார்டுக்கு வெளியிலேயே காத்திருந்தது.
இரண்டு நாட்கள் கடந்தும் நாய் அங்கிருந்து செல்லவில்லை. நோயாளிகள், பொதுமக்கள் அளித்த பிஸ்கட் உட்பட உணவுகளை சாப்பிட்டவாறு, படுத்திருந்தது. இதற்கிைடயில், நேற்று மாலை, வடிவேல், சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனை வந்தார்.
அவரை பார்த்து சந்தோஷம் அடைந்த நாய் துள்ளிக்குதித்து அவரிடம் ஓடியது. இதனை தொடர்ந்து, அவர் நாயை அழைத்துச் சென்றார்.