sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பள்ளி வீதியில் துள்ளும் நாய்கள் 

/

பள்ளி வீதியில் துள்ளும் நாய்கள் 

பள்ளி வீதியில் துள்ளும் நாய்கள் 

பள்ளி வீதியில் துள்ளும் நாய்கள் 


ADDED : மார் 31, 2025 05:49 AM

Google News

ADDED : மார் 31, 2025 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூடப்படாத குழி

ராயபுரம், மிலிட்டரி காலனி நான்காவது வீதியில் குழாய் பதிக்க குழி தோண்டி, பணி முடிந்த பின், குழியை சரிவர மூடவில்லை.

- வின்சென்ட்ராஜ், மிலிட்டரி காலனி. (படம் உண்டு)

பெயர்ப்பலகை சேதம்

திருப்பூர், மங்கலம் ரோடு, பொன்னுசாமி கவுண்டர் வீதியில் மாநகராட்சி வைத்துள்ள ஊர்ப்பெயர் பலகை சேதமாகியுள்ளது.

- ராஜூ, மங்கலம் ரோடு. (படம் உண்டு)

ரோட்டோரம் கழிவு

திருப்பூர் - பல்லடம் ரோடு, டி.கே.டி., மில் ஸ்டாப் அருகே ரோட்டோரத்தில் குப்பை, காய்கறி கழிவுகள் கொட்டப்படுகிறது. குப்பைகளை அள்ள வேண்டும்.

- முருகன், பல்லடம் ரோடு. (படம் உண்டு)

கால்வாய் அடைப்பு

தென்னம்பாளையம் ஸ்கூல் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.

- காயத்ரி, தென்னம்பாளையம். (படம் உண்டு)

அபாய டிரான்ஸ்பார்மர்

திருப்பூர், கே.பி.என்., காலனி, ஓம் சக்தி நகர் இரண்டாவது வீதியில் டிரான்ஸ்பார்மர் துருப்பிடித்து, ஆபத்தான நிலையில் உள்ளது.

- முகமது இம்தியாஜ், கே.பி.என்., காலனி. (படம் உண்டு)

தெரு நாய் தொல்லை

பல்லடம் - திருப்பூர் ரோடு, மகாலட்சுமி நகரில் தெருநாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்திக் கடிக்கின்றன.

- வெங்கடேஸ்வரன், மகாலட்சுமி நகர். (படம் உண்டு)

அங்கேரிபாளையம், விக்னேஸ்வரா பள்ளி வீதியில் தெருநாய்கள் அதிகமாக உள்ளது. ரோட்டில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.

- சுரேஷ், அங்கேரிபாளையம். (படம் உண்டு)

வாகனங்கள் தடுமாற்றம்

திருப்பூர், குமார் நகர், பிள்ளையார் கோவில் எதிரில் ரோடு குண்டும் குழியுமாக மண் நிறைந்து காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் சென்று வர தடுமாறுகின்றனர். ரோடு போட வேண்டும்.

- முருகேசன், பிள்ளையார் நகர். (படம் உண்டு)

சுகாதாரச் சீர்கேடு

திருப்பூர், 58வது வார்டு, கே.செட்டிபாளையம், வெங்கடேஸ்வரா நகரில் சாக்கடை கால்வாய் இல்லை. கழிவுநீர் வீடுகள் முன் தேங்கி நிற்பதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- சுரேஷ், வெங்கடேஸ்வரா நகர். (படம் உண்டு)

வீணாகும் மின்சாரம்

திருப்பூர், கருப்பகவுண்டம்பாளையம் - வெள்ளியங்காடு - முத்தையன் கோவில் பகுதியில் பகலிலும் தெருவிளக்கு எரிந்து மின்சாரம் வீணாகிறது. விளக்குகளை அணைத்து, மின்சாரததை சேமிக்க வேண்டும்.

- செல்வராஜ், முத்தணம்பாளையம். (படம் உண்டு)

ரியாக் ஷன்

சீரானது சாலை

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையம், ஏ.சி.எஸ்., மாடர்ன் சிட்டி, வெற்றிவேல் நகரில் சாலை சேதமாகியுள்ளது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.

- அழகுராஜ், எஸ்.பெரியபாளையம். (படம் உண்டு)

புதிய தொட்டி

திருப்பூர், 17வது வார்டு, இ.ஆர்.பி., நகர் பாரதிதாசன் வீதியில் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி உடைந்து, தண்ணீர் வீணாகி வருவதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. புதிய தொட்டி, மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டு விட்டது.

- ரஞ்சித், பாரதிதாசன் வீதி. (படம் உண்டு)






      Dinamalar
      Follow us