/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரி வசூலில் கடுமை வேண்டாம்; அவிநாசி பா.ஜ., வேண்டுகோள்
/
வரி வசூலில் கடுமை வேண்டாம்; அவிநாசி பா.ஜ., வேண்டுகோள்
வரி வசூலில் கடுமை வேண்டாம்; அவிநாசி பா.ஜ., வேண்டுகோள்
வரி வசூலில் கடுமை வேண்டாம்; அவிநாசி பா.ஜ., வேண்டுகோள்
ADDED : மார் 18, 2025 11:56 PM
அவிநாசி; அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டு பகுதிகளிலும் குடிநீர் மற்றும் சொத்து வரி வசூல் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், ராயம்பாளையம் பகுதியில் சக்திவேல் என்பவரது வீட்டில், இரண்டு குடிநீர் இணைப்புகள் இருந்துள்ளது. அதில் ஒரு இணைப்புக்கு மட்டும் வரி செலுத்திய நிலையில் மற்றொன்று பாக்கி வைத்துள்ளார்.
இதனையடுத்து, வரி வசூல் செய்யும் பேரூராட்சி ஊழியர்கள் அவரது வீட்டுக்கு சென்று, இன்றே வரி செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளனர்.
இதற்காக, இரு இணைப்புகளையும் துண்டித்துள்ளனர். இதனை கண்டித்து அவிநாசி நகர பா.ஜ.வினர் தினேஷ்குமார் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தனர்.
அதில், 'பேரூராட்சி ஊழியர்கள் வரி வசூலிக்கும் பணியில், பொதுமக்களிடம் மிரட்டுகின்றனர். இந்த போக்கை கைவிட வேண்டும். கடுமை காட்டக்கூடாது. வரி வசூல் குறித்து மக்களிடம் விளக்கி பணியில் ஈடுபட வேண்டும்,' என குறிப்பிட்டுள்ளனர்.