ADDED : செப் 23, 2026 05:43 PM
அ நிறம் | அளவு
உடுமலை: குடிமங்கலம் வட்டாரம், புதுப்பாளையம் கிராமத்தில், வேளாண்துறை சார்பில், மண் பரிசோதனை முகாம் இன்று நடக்கிறது.
வேளாண் விரிவாக்க அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், ‘புதுப்பாளையம் வீரகாமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில், நடமாடும் மண் பரிசோதனை வாகனத்தின் வாயிலாக, மண் பரிசோதனை முகாம் இன்று, (24ம் தேதி) நடக்கிறது. இனிவரும் மேலாண்மை மானிய திட்டங்களில் மண் பரிசோதனை செய்த விவசாயிகளுக்கே, முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. மண் பரிசோதனை செய்ய, 30 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். முடிவுகளை உடனே பெற்றுக்கொள்ளலாம்,’’ என்றார்.
