/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாறைக்குழிக்கு செல்லாதீர்! கலெக்டர் அறிவுறுத்தல்
/
பாறைக்குழிக்கு செல்லாதீர்! கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : ஜன 28, 2025 11:13 PM
உடுமலை; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் (பாறைக்குழி) சிறுவர்கள், மக்கள் குவாரிக்குள் நீராடுவதற்கோ, விளையாடுவதற்கோ, துணி துவைப்பதற்கோ மற்றும் கால்நடைகளை மேய்க்க செல்ல வேண்டாம் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் சிறுவர்கள், மக்கள் செல்வதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக, கல்குவாரிக்குள் நீராடுவதற்கோ, விளையாடுவதற்கோ, துணி துவைப்பதற்கோ மற்றும் கால்நடைகளை மேய்ப்பதற்கோ மக்கள் யாரும் கல்குவாரிக்குள் செல்ல வேண்டாம். அங்கு சென்று உயிர் சேதாரம் ஏற்படுவதை தடுக்க, மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

