/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீங்க!
/
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீங்க!
ADDED : செப் 26, 2024 05:56 AM
திருப்பூர்: காங்கயத்தில் விவசாயிகள் குறித்து சமூக வலைதளத்தில் அவதுாறு கருத்து பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
காங்கயம், வெள்ளகோவில் பகுதியில் தெருநாய்கள் கோழி, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இச்சூழலில், நாய்கள் கால்நடைகளை கொல்லுவதில்லை, விவசாயிகள் தங்களின் சுயநலத்துக்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக சிலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் காங்கயம் போலீஸ் ஸ்டேஷனில் திரண்டு, 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்,' விவசாயிகளுக்கு எதிராக அவதுாறு கருத்து பரப்பும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.