/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பழையன கழியாத' திடக்கழிவு திட்டம்; புதியன புகுத்துமா உள்ளாட்சி நிர்வாகங்கள்?
/
'பழையன கழியாத' திடக்கழிவு திட்டம்; புதியன புகுத்துமா உள்ளாட்சி நிர்வாகங்கள்?
'பழையன கழியாத' திடக்கழிவு திட்டம்; புதியன புகுத்துமா உள்ளாட்சி நிர்வாகங்கள்?
'பழையன கழியாத' திடக்கழிவு திட்டம்; புதியன புகுத்துமா உள்ளாட்சி நிர்வாகங்கள்?
ADDED : ஜன 16, 2025 11:27 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டம் உருவாகி, 18 ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. நகரின் வளர்ச்சி, தொழில் வளர்ச்சியில் புதிய புதிய மாற்றத்தை சிந்தித்து செயல்படுத்தியோர் ஏராளம் என்ற போதிலும், மக்களின் அடிப்படை பிரச்னையாக உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் நிலவும் தடுமாற்றத்துக்கு, தீர்வு காண்பதில் இன்னும் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவில்லை; எட்டப்படவில்லை.
குப்பைகளை தரம் பிரிப்பது, மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது, மக்காத குப்பையை மறுசுழற்சிக்கு அனுப்புவது போன்ற செயல் திட்டங்கள், எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதுவும், மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்பது, பேச்சளவில் கூட இல்லை. சாலையோரம், மயானம், குளம், குட்டைகள் தான், அங்கு குப்பை கொட்டும் இடமாக இருக்கிறது.
திருப்பூர் மாநகராட்சியை பொறுத்தவரை, இரு ஆண்டுக்கு முன், துாய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பேசுகையில், ''அடுத்த, 2 ஆண்டுகளில் குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; அதை நோக்கி பணியாற்ற வேண்டும்'' என பேசியிருந்தார். ஆண்டுகள் உருண்டோடியது தான் மிச்சம். ஆனால், குப்பைக்கொட்ட பாறைக்குழிகளை தேடிக் கொண்டிருக்கிறது, மாநகராட்சி நிர்வாகம்.
குப்பையில்லா நகரை உருவாக்க நவீன தொழில்நுட்பங்களைக் கையாள மாநகராட்சி நிர்வாகம் சபதம் மேற்கொள்ள வேண்டும்.
மனமிருந்தால்மார்க்கமுண்டு
தற்போதைய சூழலில், குப்பை மேலாண்மையை வெற்றிகரமாக செயல்படுத்த பல்வேறு வழிமுறைகளை, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள் செயல்படுத்தி வருகின்றனர். 'குப்பையில் இருந்து தங்கம்' என்ற தலைப்பில் வேலுாரைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவரது குழுவினர், அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களின் ஒத்துழைப்புடன், குப்பையில்லாத நகரை உருவாக்க முடியும் என்பதை, நாட்டின் பல்வேறு நகரங்களில் நிரூபித்து வருகின்றனர்.
திருப்பூர் பாதுகாப்பு இயக்கத்தினர் கூட, நவீன தொழில்நுட்ப உதவியுடன் குப்பையை அகற்றும் வழிமுறையை கற்பித்து வருகின்றனர். ஆனால், இத்தகைய தொழில்நுட்பங்களை கையாண்டு, குப்பையில்லா நகரை உருவாக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் தயாராக இல்லை என்பது தான் வேதனையான உண்மை.