/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அ... ஆ...' எழுதுடா செல்லம்! மழலைகள் பிஞ்சுவிரல் பிடித்து 'தினமலர்' வித்யாரம்பம் கோலாகலம்
/
'அ... ஆ...' எழுதுடா செல்லம்! மழலைகள் பிஞ்சுவிரல் பிடித்து 'தினமலர்' வித்யாரம்பம் கோலாகலம்
'அ... ஆ...' எழுதுடா செல்லம்! மழலைகள் பிஞ்சுவிரல் பிடித்து 'தினமலர்' வித்யாரம்பம் கோலாகலம்
'அ... ஆ...' எழுதுடா செல்லம்! மழலைகள் பிஞ்சுவிரல் பிடித்து 'தினமலர்' வித்யாரம்பம் கோலாகலம்
ADDED : அக் 13, 2024 05:45 AM

திருப்பூர்: அவிநாசி அருகே ராக்கியாபாளையம் ஐஸ்வர்யா கார்டன், ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில், நுாற்றுக்கும் அதிகமான குழந்தைகள், 'அ'னா, 'ஆ'வன்னா எழுதி, சான்றோர் ஆசியுடன் தங்கள் கல்விப்பயணத்தை மங்களகரமாக துவங்கினர்.
'தினமலர்' பட்டம் பதிப்பு, ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பிளே ஸ்கூல், ஜகன்மாதா ஸ்ரீராஜ ராஜேஸ்வரி டிரஸ்ட் ஆகியன சார்பில், பண்டிதர்களின் வேத பாராயணத்துடன் நேற்று சிறப்பாக நடந்தது.
விஜயதசமி நாளில் துவங்கும் எந்தவொரு செயலும் வெற்றி பெறும் என்பது ஐதீகம். அதன்படி, 'அ'னா, 'ஆ'வன்னா...' என, எழுத்தறிவித்தலுடன், குழந்தைகள் நேற்று தங்கள் கல்விப்பயணத்தை துவங்கின.
வான் மழை துாவல்கல்வி வாசல் திறப்பு
கோவில் வளாகத்தில், சிவாச்சார்யார்கள் குழுவினரால், ஸ்ரீசரஸ்வதி ஸூக்த யாகம், ஹயக்ரீவர் யாகம் போன்ற யாகசாலை பூஜைகள் துவங்கின. அதிகாலை முதல், மழை பெய்ததையும் பொருட்படுத்தாமல், குழந்தைகளுடன் பெற்றோர் வந்துவிட்டனர். தங்களது பெயர் பதிவை சரிபார்த்து, 'டோக்கன்' பெற்று, பூஜையில் பங்கேற்றனர்.
சரவண மாணிக்கம் தலைமையிலான சிவாச்சார்யார் குழு, யாகசாலை பூஜைகளை, வேத பாராயணங்களுடன் நிகழ்த்தினர்.
நிறை வேள்வியை தொடர்ந்து, குழந்தைகள் கல்விக்கான கூட்டு பிரார்த்தனை நடந்தது. அதனை தொடர்ந்து, கல்வியாளர்கள் முன்னிலையில், குழந்தைகளுக்கான எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி துவங்கியது.
நெல்மணிகளில்'அ'னா, 'ஆ'வன்னா
அவிநாசி திருப்புக்கொளியூர் ஆதீனம் வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், குழந்தைகளுக்கு 'அ'னா, 'ஆ'வன்னா எழுதி, எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் அறக்கட்டளை தலைவர் ஞானகுரு - லாவண்யா தம்பதியர், குழந்தைகளை ஆசீர்வதித்து, வித்யாரம்பத்தை துவக்கி வைத்தனர்.
ஸ்ரீசக்தி கல்விக்குழுமங்களின் தலைவர் தங்கவேல், துணை தலைவர் தீபன் தங்கவேல், திருப்பூர் சாரதாம்பாள் கோவில் நிர்வாகி ஆடிட்டர் ராமநாதன், வெற்றி அறக்கட்டளை தலைவர் சிவராம் ஆகியோர், குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தனர். குழந்தைகளின் பிஞ்சு விரல்களை பிடித்து, பூஜிக்கப்பட்ட நெல்மணிகளில், 'அ'னா, 'ஆ'வன்னா என்று எழுதி, கல்வியை துவக்கி வைத்து, குழந்தைகளை ஆசீர்வதித்தனர்.