/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'டபுள் செஞ்சுரி' அடித்த முருங்கை விலை: காய்கள் விலை கிடுகிடு
/
'டபுள் செஞ்சுரி' அடித்த முருங்கை விலை: காய்கள் விலை கிடுகிடு
'டபுள் செஞ்சுரி' அடித்த முருங்கை விலை: காய்கள் விலை கிடுகிடு
'டபுள் செஞ்சுரி' அடித்த முருங்கை விலை: காய்கள் விலை கிடுகிடு
ADDED : டிச 01, 2025 01:37 AM
உடுமலை: மழையால், வரத்து பாதித்து, பச்சை மிளகாய், முருங்கை, வெண்டை, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை, உழவர் சந்தையில் அதிகரித்து காணப்பட்டது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், காய்கறி சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், உடுமலை உழவர் சந்தைக்கு சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து காய்கறி வரத்து உள்ளது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில், இச்சந்தைக்கு நுகர்வோர் வருகை அதிகளவு இருக்கும்.
தொடர் மழை காரணமாக அனைத்து சாகுபடிகளிலும், உற்பத்தி பாதித்துள்ளது; அறுவடை பணிகளிலும் சிரமம் நீடிக்கிறது.
இதனால், உழவர் சந்தை உள்ளிட்ட அனைத்து சந்தைகளுக்கும், காய்கறி வரத்து குறைந்து விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
அவ்வகையில், நேற்று உழவர் சந்தையில், பச்சை மிளகாய் கிலோ 30-45 ரூபாய்க்கு விற்பனையானது. சின்னவெங்காயம் 40-65, வெண்டை 60-65, பீன்ஸ் 55-60 ரூபாய்க்கு விற்பனையானது.
வரத்து மற்றும் உற்பத்தி பாதிப்பால், முருங்கை விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று கிலோ 200-220 ரூபாய் வரை விற்பனையானது. திண்டுக்கல், மூலனுார் பகுதியில் இருந்து முருங்கை வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளது. வரத்து சீராக சில வாரங்களாகும்; முகூர்த்த நாள் என்பதால், தேவைக்கேற்ப வரத்து இல்லாமல், முருங்கை விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
பந்தல் காய்கறிகளான பீர்க்கன், கிலோ 50-58; பாகல் 40-45; புடலை 20-30 ரூபாய் என்றளவுக்கு விற்பனையானது. இதே போல், தக்காளி வரத்தும் படிப்படியாக குறைந்து வருகிறது.
நேற்று உழவர் சந்தையில், கிலோ 35-40 ரூபாய்க்கு தக்காளி விற்பனையானது. மழை நீடித்தால், தக்காளி விலையிலும் அதிக மாற்றம் ஏற்படும்.
அறுவடை பணிகள் முடங்கியுள்ளதால், தேங்காய் விலையிலும் மாற்றம் நிலவுகிறது. நேற்று ஒரு கிலோ தேங்காய், 65-70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

