/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் இரட்டை தீபாவளி: வடமாநிலத்தவர் உற்சாகம்
/
திருப்பூரில் இரட்டை தீபாவளி: வடமாநிலத்தவர் உற்சாகம்
திருப்பூரில் இரட்டை தீபாவளி: வடமாநிலத்தவர் உற்சாகம்
திருப்பூரில் இரட்டை தீபாவளி: வடமாநிலத்தவர் உற்சாகம்
ADDED : அக் 30, 2024 06:50 AM

திருப்பூர் : வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசிப்பதால், திருப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் இரட்டை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தொழில் நிமித்தமாக திருப்பூர் வந்த வடமாநிலத்தை சேர்ந்தவர்கள், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். ம.பி., - உ.பி., ராஜஸ்தான், குஜராத், ஒடிசா, உத்தரகண்ட், ஹரியானா, பஞ்சாப் என, பல்வேறு மாநிலத்தவரும் வசிக்கின்றனர். கடந்த, 10 ஆண்டுகளாக, வடமாநில தொழிலாளர்கள், பனியன் தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர்.
இருப்பினும், ராஜஸ்தான், குஜராத்தை சேர்ந்த வர்த்தகர்கள், 30 ஆண்டுகளாக திருப்பூரில் தொழில் நடத்தி வருகின்றனர். வடமாநிலங்களில், தீபாவளி பண்டிகை, ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, தீபாவளிக்கு மறுநாள், புது கணக்கு துவக்கும் விழாவாக கொண்டாடப்படுகிறது. திருப்பூரில், தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வடமாநிலத்தவர், இரண்டாவது நாள், தங்கள் நிறுவனங்கள், கடைகளில் புது கணக்கு துவக்கும் நிகழ்ச்சியை கொண்டாடுகின்றனர்.
சில ஆண்டுகளில், அமாவாசையும், தீபாவளியும் ஒரே நாளில் வரும் போது, ஒரே நாளில் கொண்டாடுகின்றனர். இந்தாண்டு, தீபாவளியும், அடுத்தநாள் அமாவாசையும் வருவதால், இரட்டை தீபாவளி கொண்டாட, வடமாநிலத்தவர் ஆயத்தமாகி வருகின்றனர்.
இதுகுறித்து வடமாநில வியாபாரிகள் கூறுகையில், 'தீபாவளிக்கு அடுத்தநாள், அமாவாசை தினத்தில், புது கணக்கு துவக்கும் நிகழ்ச்சியை கொண்டாடுகிறோம். கடைகளின் முன் வாழைக்கன்று, மாவிலை கட்டி, மலர் மாலைகளால் அலங்காரம் செய்து, சுவாமி படங்களுக்கு தீபம் ஏற்றி வைத்து வழிபாடு நடத்துவோம். முன்னதாக, பட்டாசு வெடித்தும், நண்பர் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடுவோம்,' என்றனர்.