/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டாக்டர் ஸ்மைல் ஆர்க்கிடெக்ட் பல் மருத்துவமனை துவக்கம்
/
டாக்டர் ஸ்மைல் ஆர்க்கிடெக்ட் பல் மருத்துவமனை துவக்கம்
டாக்டர் ஸ்மைல் ஆர்க்கிடெக்ட் பல் மருத்துவமனை துவக்கம்
டாக்டர் ஸ்மைல் ஆர்க்கிடெக்ட் பல் மருத்துவமனை துவக்கம்
ADDED : டிச 08, 2024 02:35 AM
திருப்பூர்: திருப்பூரில் 'டாக்டர் ஸ்மைல் ஆர்க்கிடெக்ட்' பல் மருத்துவமனை நேற்று துவங்கப்பட்டது.
திருப்பூர், ஓடக்காடு, ஸ்டேன்ஸ் ரோடு, 4வது வீதியில் குமாரசாமி அண்ட் கோ பில்டிங்கில், 'டாக்டர் ஸ்மைல் ஆர்க்கிடெக்ட்' என்ற பல் மருத்துவமனையை மேயர் தினேஷ்குமார் திறந்துவைத்தார். இந்திய பல் மருத்துவர்கள் சங்க திருப்பூர் முன்னோடி மருத்துவர் நடராஜன் முன்னிலை வகித்தார். வார்டு கவுன்சிலர் சின்னசாமி வாழ்த்தினார்.
'வாழ்க வளமுடன்' ஆசிரியை பாரதி குத்துவிளக்கு ஏற்றினார். முன்னதாக டாக்டர்கள் அரவிந்த் ராஜ்குமார், மஞ்சுளா ஆகியோர் வரவேற்றனர்.
பல் மருத்துவமனை சிறப்பு குறித்துஅவர்கள் கூறுகையில், 'மல்டி ஸ்பெஷாலிட்டி பல் மருத்துவமனையாக மட்டுமின்றி ஸ்லீப் தெரபி மையமாக மக்களின் துாக்கப்பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் வகையில் இம்மருத்துவமனை செயல்படும்; பல் சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு தரும் மையமாக இது உள்ளது'' என்றனர்.
மேலும் விபரங்களுக்கு 6369211811 என்ற எண்ணில் அழைக்கலாம்.