/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டிராகன் பழ சாகுபடி; விவசாயிகள் ஆர்வம்
/
டிராகன் பழ சாகுபடி; விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஆக 06, 2025 10:52 PM

பொங்கலுார்; மத்திய மற்றும் தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது, டிராகன் பழம். கள்ளி வகையைச் சேர்ந்த தாவர குடும்பத்தைச் சேர்ந்தது.
இது 'நம்ம ஊர்' கள்ளிச் செடி போல் காணப்படும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டிராகன் பழங்கள் விற்பனைக்கு வந்து கொண்டிருந்தன.
தற்போது திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் இவற்றை சாகுபடி செய்ய துவங்கி உள்ளனர். இது நடவு செய்து வளர்ப்பதற்கு முதலில் அதிக செலவு ஆகிறது. இதனால் இந்த பழத்தின் விலையும் அதிகம்.
உள்ளூர் விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்யும் போது புதிய முறைகளில் இவற்றை வளர்க்கத் துவங்கினால் இவற்றின் உற்பத்தி செலவு குறையும்.
இதன் வாயிலாக எதிர்காலத்தில் பழத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.