sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 மேடையில் நாடகம்; ஆடையில் அற்புதம்; மாணவர் படைப்பாக மலர்ந்த 'பேஷ்கான் 2கே26'

/

 மேடையில் நாடகம்; ஆடையில் அற்புதம்; மாணவர் படைப்பாக மலர்ந்த 'பேஷ்கான் 2கே26'

 மேடையில் நாடகம்; ஆடையில் அற்புதம்; மாணவர் படைப்பாக மலர்ந்த 'பேஷ்கான் 2கே26'

 மேடையில் நாடகம்; ஆடையில் அற்புதம்; மாணவர் படைப்பாக மலர்ந்த 'பேஷ்கான் 2கே26'


ADDED : பிப் 27, 2026 06:56 AM

Google News

ADDED : பிப் 27, 2026 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் 'நிப்ட்-டீ' கல்லுாரியில், 'பேஷ்கான் 2கே26' என்ற தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் நேற்று துவங்கியது. கல்லுாரி தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.

தலைமை ஆலோசகர் ராஜாசண்முகம், ஆலோசகர் முருகானந்தன், இணைச்செயலாளர் ஸ்ரீதர், டெக்னோ ஸ்போர்ட்ஸ் நிறுவனர் குமார் சாந்தலியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேசிய தொழில்நுட்ப ஜவுளி திட்ட இயக்குனர் அசோக் மல்ேஹாத்ரா, கருத்தரங்கை துவக்கிவைத்தார்.

தொழில் நுட்ப ஜவுளி உற்பத்தி சார்ந்த இரண்டு ஸ்டார்ட் - அப் நிறுவனங்களுக்கு, மொத்தம் 80 லட்சம் ரூபாய் மானியம்; ஏழு நிறுவனங்களுக்கு முதலீட்டு நிதி 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

நீடித்த நிலைத்தன்மையை வலியுறுத்தும் வகையில், நிப்ட்-டீ மாணவ, மாணவியர் நாடகத்துடன் கூடிய பேஷன் ஷா நடத்தினர்.

பண்டைக்கால தமிழர்களின் ஒருநாள் வாழ்க்கையை கண்முன் நிறுத்தும்வகையில், ஓலை குடிசை வீடு, கிணறு போன்ற பின்புல காட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தன.

மாணவ, மாணவியர், ராட்டையில் நுால் நுாற்பது, உழவுத்தொழில், மீன் வியாபாரி, சேலை, அணிகலன் வியாபாரி; உமி புடைக்கும் மூதாட்டி; கோவில் திருவிழா நிகழ்வு; பாட்டியும் பேத்தியும் விளையாடுவதுபோன்ற கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து அசத்தினர்.

தங்கள் கைவண்ணத்தில் தயாரித்த, பாரம்பரிய வேட்டி, சேலைகளை வெவ்வேறு டிசைன்களில் தயாரித்து, கதாபாத்திரத்துக்கு ஏற்றவகையில் ஆடை, அணிகலன்களை அணிந்து, நடிப்பு திறனை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து ஒவ்வொருவராக, மேடையில் அணிவகுத்து நடந்துவந்து, பேஷன் ஷோ நடத்தினர்.

கதர் ஆடைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்வகையிலும், எதிர்கால பேஷன் அடிப்படையிலும் புதிய டிசைன்களில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் அணிந்துவந்து, பேஷன் ஷோ நடத்தினர்.

இரண்டாவது நாளான இன்று, ஆடை உற்பத்தி சார்ந்த பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம், ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.






      Dinamalar
      Follow us