நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
' மகாபாரதம்' இதிகாசத்தின் முக்கியமான கதா பாத்திரமான, திரவுபதி வீரம் மிக்க இளவரசியாக கருதப்படுகிறார். பல்வேறு திறன்களைப் பெற்ற அவர், எதற்கும் சமரசம் செய்து கொள்ளாத தீரம் மிக்கவர். அவரது கதாபாத்திரத்தின் சிறப்பை விளக்கும் வகையில், இந்த நாடகம், இசை, நடனம், வாள் சண்டை போன்றவற்றின் பங்களிப்புடன் அமைந்துள்ளது.
இதை தாரிணி கோமல் எழுதி இயக்கியுள்ளார். மகாகவி பாரதியின் பேரன் ராஜ்குமார் பாரதி, இசை அமைத்தும், கவிஞர் சதீஷ்குமார் வசனமும் பங்களிப்பு செய்துள்ளனர்.திரவுபதியின் பிறப்பு முதல் பாண்டவர்களை அவர் மணம் செய்வதன் காரணம் மற்றும் கவுரவர்களால் அவர்கள் தோற்கடிக்கப்படுவது, அவர்களை சபதமேற்று பழி தீர்ப்பது என விரிவாக விளக்கும் வகையில் இந்நாடகம் அமைந்திருந்தது.