/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கனவு இல்லம்' சிக்கல்: அரசு நிதி இழுத்தடிப்பு
/
'கனவு இல்லம்' சிக்கல்: அரசு நிதி இழுத்தடிப்பு
ADDED : டிச 28, 2024 06:37 AM
திருப்பூர்; தமிழகத்தில், மாநில அரசின் கனவு இல்லம்(கலைஞர் கனவு இல்லம்) திட்டத்தில், 2024 -2025ல், ஒரு லட்சம் வீடுகள் கட்டுவது என, மாநில அரசு முடிவெடுத்துள்ளது. மொத்தம் 360 சதுர அடி பரப்பளவில் வீடு கட்ட, 3.50 லட்சம் ரூபாய் மாநில அரசின் சார்பில் நிதி வழங்கப்படுகிறது. மூன்று தவணைகளில், பயனாளிகளின் வங்கிக்கணக்கில் தொகை வரவு வைக்கப்படுகிறது.
இதில், முதல் தவணை நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது. ஜன்னல்மட்ட நிலையில் கட்டுமானப்பணி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு, இரண்டாம் தவணை நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை; இதனால், பயனாளிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். நிதி ஒதுக்கீடு இல்லாததால், வீடுகள் பாதியில் நிற்கின்றன.கிராம ஊராட்சி தலைவர்கள் கூறுகையில், 'இரண்டாம் தவணைக்கான பயனாளிகள் காத்திருக்கும் நிலையுள்ளது. அவ்வப்போது நிதி ஒதுக்கீடு செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

