/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கனவு இல்லம்' திட்டம் வீடு கட்ட பணியாணை
/
'கனவு இல்லம்' திட்டம் வீடு கட்ட பணியாணை
ADDED : ஜூன் 12, 2025 01:10 AM
திருப்பூர் : கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
வரும் 2030க்குள், குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், மாநில அரசு கனவு இல்லம் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. கிராமப்புறங்களில், ஆறு ஆண்டுகளில், எட்டு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். முதல்கட்டமாக, 2024 - 25ம் ஆண்டில், ஒரு வீட்டுக்கு, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், இத்திட்டத்தில், அவிநாசியில், 151 பேர், தாராபுரம் - 191, குடிமங்கலம் - 304, மடத்துக்குளம் - 236, மூலனுார் - 146, பல்லடம் -- 281, பொங்கலுார் - 136, குண்டடம் - 215, திருப்பூர் ஒன்றியம் - 171, வெள்ளகோவில் - 276, உடுமலை - 346, ஊத்துக்குளி - 176 பேருக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை மூலம், கனவு இல்லம் மற்றும் ஊரக பழுது பார்த்தல் திட்டங்களில், 5,186 பயனாளிகளுக்கு, மொத்தம் 105.36 கோடி மதிப்பீட்டில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.