/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசுத்துறையில் அதிகாரி ஆகும் கனவுபோட்டி தேர்வுக்கு அதிகரிக்கும் ஆர்வம் அரசுத்துறையில் அதிகாரி ஆகும் கனவு

ADDED : நவ 10, 2024 04:23 AM
இன்றைய போட்டி நிறைந்த சூழலில் வேலை வாய்ப்பு பெறுவது என்பது கடினமான செயலாக மாறியிருக்கிறது. இதில், ஏழை, நடுத்தர வர்க்கத்து பிள்ளைகள் மத்தியில், அரசுப்பணி மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது.
அவர்களை ஊக்குவிக்கும் வகையில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுக்கான பயிற்சி, தொடர்ந்து வழங்கப்படுகிறது.
விரைவில் நடத்தப்பட உள்ள குரூப் 2 முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு, திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. பயிற்சி மட்டுமின்றி, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
'இதில், 90 பேர் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர். கல்லுாரி முடித்த இளைஞர், இளம் பெண்கள் மத்தியில் அரசுப்பணி சேர்வதில், ஆர்வம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, மாணவர்களை விட மாணவியரே அதிகளவில் பங்கேற்கின்றனர்,'' என்கின்றனர் வேலை வாய்ப்பு அலுவலர்கள்.