ADDED : நவ 21, 2024 11:37 PM
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் திட்டங்களில் நீர் ஆதாரமாக பவானி காவிரி ஆறு, மேட்டுப்பாளையம் பவானி ஆறு ஆகியன உள்ளன.
இந்த ஆறுகள் அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, செந்நிறத்தில் நீர் பாய்கிறது. இந்த நீரை நேரடியாகப் பருக கூடாது. இதனால் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில், 'திருப்பூர் மாநகராட்சிக்கு, 2,3 மற்றும் 4வது குடிநீர் திட்டங்களின் நீர் ஆதாரமாக உள்ள காவிரி மற்றும் பவானி ஆறுகளில் மழை காரணமாக தண்ணீர் செந்நிறமாக வருகிறது.
இத்திட்டங்களில் குடிநீர் பெறும் மாநகராட்சி பகுதி மக்கள், இக்குடிநீரை நன்றாகக் காய்ச்சி, வடிகட்டிப் பருக வேண்டும்,' என கூறியுள்ளார்.