/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டில் பாயும் குடிநீர்; மக்கள் அதிருப்தி
/
ரோட்டில் பாயும் குடிநீர்; மக்கள் அதிருப்தி
ADDED : ஏப் 16, 2025 10:59 PM

பொங்கலுார்; கோடைக்காலத்தில், குடிநீர் ரோட்டில் பாய்ந்து வீணாகி வருவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
அத்திக்கடவு குடிநீர் பொங்கலுார் பகுதி கிராமங்களுக்கு மாதத்திற்கு ஒன்றிரண்டு முறை வருவதே 'அதிசயம்'.
தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீருக்கான தேவை அதிகம் உள்ளது.
போதுமான குடிநீர் கிடைக்காததால் மக்கள் தங்கள் தேவைகளுக்கு வெளியில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பொங்கலுார் மின்வாரிய அலுவலகம் அருகே அத்திக்கடவு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக குடிநீர் ரோட்டில் பாய்ந்தோடி வீணாகிறது. ஏற்கனவே குடிநீர் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலையில் உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
கடைக்கோடி மக்களுக்கும் குடிநீர் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.